தற்போதைய காலத்தில் பொதுவாக நாம் பயன்படுத்தும் மின் சாதனங்களில் பேட்டரி சார்ஜிங் உள்ளடக்கிய வருகின்றன. அவற்றில் லித்தியம் -ஐஒன் (lithium-ion) அல்லது லித்தியம்- பாலிமர் (lithium-polymer) போன்ற பேட்டரி வகைகளை பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.
தற்போதைய சூழலில் இவ்விரண்டு பேட்டரியைத் தவிர வேறு ஒன்று பயன்படுத்தக்கூடிய சாற்றிய கூறுகள் தற்போது இல்லை.
பொதுவாக ஒரு நபர் தன் மொபைல் அல்லது மடிக்கணியை 100% சார்ஜ் செய்யும் போது பேட்டரி உடனடியாக சேதப்படுத்தாது. ஆனால் ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் 100% சார்ஜிங் செய்து கொண்டே இருந்தால் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
100% சார்ஜ் செய்யும் போது உங்கள் மின் சாதங்களில் உள்ள பேட்டரியில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும்
1. இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல Li-io வகை பேட்டரிகளை உபயோகப்படுகின்றன, இதன் திறன் வரப்பு பெரிதாக இல்லாததால் 20% & 80% குள் வைத்திருப்பது மிக நன்று. நீங்கள் எப்போது எல்லாம் 100% சார்ஜ் செய்கிறீர்களோ அப்போதெல்லாம் உங்கள் பேட்டரி செல்களில் அதிக Voltage அழுத்தம் வர வாய்ப்புள்ளது. இதன் காரணங்களால் பேட்டரி செயலிழக்களம் அல்லது ஏதேனும் ஆபத்து நிகழலாம்.
2. ரீசார்ஜ் 100% எட்டும் போது வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் இது உங்களுக்கும் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆபத்து விளைவிக்க கூடும். தற்போது நாம் உபயோகிக்கும் சாதனங்களில் Thermal Management System பயன்படுத்தப்படுவதால் ஓரளவுக்கு வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கும் ஆனால் தொடர்ச்சியாக வெப்பநிலை அதிகரித்துக் கொண்டிருந்தால் உங்கள் சாதனங்களில் உள்ள பேட்டரி மிகப்பெரிய சேதாரத்தை விளைவிக்கும்.
3. 100% சார்ஜ் செய்வது எவ்வாறு தவறோ அதைப்போல 0% சார்ஜை குறைப்பது காரணம் என்னவென்றால், நீங்கள் தொடர்ச்சியாக உபயோகித்து விட்டு switch off க்கு பிறகு சார்ஜ் செய்யும் போது ஒரேயடியாக 0% to 100% தொடர்சியாக செய்யும் போது பேட்டரியின் தரம் குறையும். அதனால், என்னுடைய கருத்து எண்ணவென்றால் 5% க்கு குறைவாக செல்ல அனுமதிக்காமல் உடனடியாக
சார்ஜ் செய்வது மிகவும் முக்கியமானது.
மொபைல் மற்றும் மடிக்கணினியின் பேட்டரிகளின் வாழ்வை அதிகரிக்க தேவையான குறிப்புகள்
1. நீங்கள் உபயோகிக்கும் மொபைல் அல்லது மடிக்கணினிக்கு 85% வரை சார்ஜ் செய்து வைத்திருப்பது நல்லது மற்றும் 5% கீழ் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. உங்கள் OS மென்பொருளை எப்போதும் up to date யில் வைத்திருப்பது உங்கள் பேட்டரியின் தரத்தை தக்க வைக்க உதவும்.
3. நீங்கள் உபயோக்காத நேரத்தில் ஜிபிஎஸ்(GPS ) யை முடக்கி வைப்பது நன்று.
4. பேட்டரி குறையும் போது பவர் சேவிங் மோட் ஆன் செய்வது மிகச் சிறந்ததாக இருக்கும்.
5. உங்கள் மடிக்கணினி அல்லது மொபைலில் உள்ள தேவையற்ற செயலிகளை நீக்குவது மிகவும் நன்று ஏனென்றால், தேவையற்ற செயலிகள் உங்கள் பேட்டரியை புரிஞ்ச கூடும்.
6. ஸ்கிரீன் பிரகாசத்தை தேவையற்ற நேரத்தில் குறைத்து வையுங்கள்.
7. Rapid Charging தவிர்த்து சாதாரண சார்ஜிங்கை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும். ஆனால் இந்த வகை சார்ஜர்கள் உங்கள் சாதனங்களில் டெம்பரேச்சரை அதிகரிக்கும்.
8. உங்கள் சாதனங்களை வெப்பமில்லாத சூழலில் வைத்திருக்க முயற்சிக்கவும்.
9. உங்கள் சார்ஜர் மற்றும் சார்ஜஸ் சுருக்கும் இடத்தில் சுத்தமாக வைத்திருங்கள்.
இவ்வாறு 9 குறிப்புகளை பின்பற்றினால் பேட்டரியின் தரத்தையும் நீண்ட நேரம் உபயோகிக்கவும் உதவுகிறது.
பொதுவான கேள்விகள்
1. நம் மொபைல் மற்றும் மடிக் கணினிகளில் உள்ள எந்தெந்த செயலிகள் பேட்டரியை தேவையற்ற உறிஞ்சுகின்றன?
நீங்கள் மொபைல் போன் பயனாளர் இருந்தால் – பேஸ்புக் (facebook ), இன்ஸ்டாகிராம் (Instagarm), ஸ்னாப் ஷாட் (Snap chat), யூடுபே (Youtube) மற்றும் கூகுள் மேப்ஸ்.
அதுவே நீங்கள் மடிக்கணினி பயனாளர் இருந்தால் – மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft teams), ஸ்கைப் (Skype), மைக்ரோசாப்ட் அவுட்லுக் (Microsoft Outlook) மற்றும் வெப் சர்ச் ( Web search).
2. ஒரு மொபைல் பயனாளராக 5 மணி நேரம் சார்ஜ் செய்வது பேட்டரிக்கு உகந்ததா?
பொதுவாக இது நீங்கள் உபயோகிக்கும் மொபைலின் தரத்தை பொறுத்தது. காரணம் என்னவாயில் காலத்திற்கு ஏற்ப மொபைல்களின் தரமும் அதன் பேட்டரி திறன் வரம்பு மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆகையால் நம்மால் அதை சரியாக கணக்கிட இயலாது. இருப்பினும் மொபைல் வல்லுனர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
3. இரவு நேரங்களில் மொபைல் அல்லது லேப்டாப் சார்ஜ் செய்வது உகந்ததா?
இல்லை, காரணம் நாம் அசந்து தூங்கி விட்டாள் பேட்டரியின் வரம்பு 100 சதவீதத்தை அடைந்து விடும். இதனால் ஏதேனும் ஆபத்து நேரா வாய்ப்புள்ளது.
4. பொதுவாக நம் பேட்டரியின் ஆயுளை குறைக்கும் முக்கிய காரணி எது
இதன் முக்கிய காரணம் என்னவென்றால் நம் மொபைல் அல்லது மடிக்கணினில் உள்ள நாம் உபயோக்காத செயலிகள்(Apps) தான். ஏனென்றால் இவை எப்போதும் பேக்ரவுண்டில் உங்கள் டேட்டா மற்றும் பேட்டரியை உறிஞ்சி கொண்டு இருக்கும். ஆகையால் இதை தவிர்க்க தேவையற்ற செயலிகளை நீக்கவும்.
5. நம் மொபைலில் Airplane mode ON செய்வதன் மூலம் பேட்டரியை சேமிக்க முடியுமா?
கண்டிப்பாக முடியும், நீங்கள் Airplane mode ON செய்வதால் செல்லுலார் நெட்வொர்க் (celluar network ) முடங்கும் இதன் காரணமாக உங்கள் பேட்டரி பெரிதளவு சேமிக்க முடியும்.
கடைசியாக இந்தப் பதிவு உங்கள் சந்தேகங்களை தீர்த்தியிருக்கும் என்று நான் கருதுகிறேன். மேலும் தகவல்களுக்கு இந்த வலைப்பதிவை தொடர்ந்து பின்பற்றவும்.
மேலும் படிக்க – வீடுகளுக்கு தேவையான மின் மோட்டார் பம்புகளை வாங்குவது எப்படி | How to buy Motor pump for home