தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் வீடுகளில் மின் சக்தி உடைய சாதனங்களின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக நவீன தொலைக்காட்சி, wi-fi, சத்தம் கேட்டு தானா ஏங்கும் மின்விளக்கு போன்ற பல்வேறு வந்துவிட்டன. அதைப்போல வீடுகளில் மின்மோட்டார் இணைப்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முதலில் மாநகரங்கள், நகரங்கள் வாழும் மக்களே அதிக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் சிறு சிறு கிராமங்களிலும் இந்த சாதனங்களை உபயோகிக்க தொடங்கி விட்டார்கள்.
இருந்த போதிலும் நம் மக்களுக்கு இருக்கும் ஒரே குழப்பம் என்னவென்றால் நம் வீட்டிற்கு தேவையான சிறந்த மற்றும் குறைந்த விலையில் மின் மோட்டார் களை எப்படி வாங்க வேண்டும் என்று சிறிது தெளிவில்லாமல் இருக்கிறார்கள். ஆகையால் இந்த தொகுப்பில் நம்ம வீட்டிற்கு ஏற்ப சிறந்த மற்றும் குறைந்த விலையில் உள்ள மின் மோட்டார்களை எப்படி வாங்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
வீட்டிற்கு ஏற்ப சிறந்த மோட்டார் பம்புகள் மற்றும் அதன் விலை
பொதுவாக மோட்டார் பம்புகளில் வாங்குவதற்கு முன்பு அதன் வகைகளை பற்றி அறிவது முக்கியம். இல்லையெனில் உங்களால் தெளிவாக முடிவு எடுக்க இயலாது. மின் மோட்டார் மொத்தம் 4 வகைப்படும் Centrifugal, Submersible, Booster & Self priming pumps ஆகும்.
சென்ட்ரிபுகள் பம்ப் (Centrifugal Pump):
இந்த வகையான பம்புகள் தான் பொதுவாக அனைத்து வீடுகளிலும் உபயோகிக்கப்படுகிறது. உங்கள் வீட்டு தரைதளத்தில் உள்ள சேமிப்புத் தொட்டியில் இருந்து மேல் உள்ள தண்ணீர் டேங்குக்கு மாற்ற உதவும். குறிப்பாக இந்த வகை பம்புகள் குறைந்த உயர கட்டிடங்களுக்கு ஏற்றது.
இதன் ஆரம்ப விலை ₹2000 முதல் ₹5000 இருக்கும். Crompton, Lakshmi, sameer, texmo போன்ற பிராண்டுகளை குறித்து இதன் விலை மாறுபடலாம்.
சப்மிர்சிப்ளே பம்ப் (Submersible Pump):
சென்ட்ரிபுகள் பம்புகளைப் போலவே இதுவும் வீட்டு உபயோகத்திற்கு ஏற்றது. ஆனால் இதன் செயல்பாடு மிகவும் சக்தி வாய்ந்தது காரணம் இவை பொதுவாக ஆழ்துளை கிணறுகள் மற்றும் நிலத்தடி தொட்டிகளில் இருந்து உறிஞ்ச வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 4000 முதல் 15000 வரை இருக்கக்கூடும்.
பூஸ்டர் பம்புகள் (Booster Pumps):
இந்தப் பம்புகளின் உபயோகம் என்னவென்றால, நகராட்சியில் இருந்து வரக்கூடிய வேகம் குறைவாக இருந்தால் சேமிப்புத் தொட்டியில் தண்ணீர் வேகமாக இறங்காது. இதன் காரணமாகத்தான் பூஸ்டர் பம்புகள் உபயோகப்படுகின்றன. இதன் ஆரம்ப விலை ரூபாய 2000 முதல் 8000 வரை இருக்கக்கூடிய.
செல்ப் ப்ரிமிங் பம்புகள் (Self-Priming pumps):
இவை அனைவருக்கும் அறிந்தவாறு பயன்படுத்தக்கூடிய ஒன்றாகும். தோட்டத்திற்கு நீர்ப்பாசனம் மற்றும் தொட்டியில் இருந்து வேறு இடத்திற்கு பரிமாற்றம் செய்வது போன்ற சிறிய பயன்பாடுகளுக்கு உதவக்கூடியது.
இதன் ஆரம்ப விலை ரூபாய் 2000 முதல் 8000 வரை இருக்கக்கூடிய.
மின் மோட்டார் களை வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய கூடுதல் குறிப்புகள்
1. முதல், நீங்கள் தேர்ந்தெடுக்கும் மோட்டார் LPM & GPM அளவிடப்படுகிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். ஏனென்றால் இவ்வகை பம்புகள் கூடுதல் விலையாக இருக்கும்.
2. செங்குத்தாக தண்ணீரை அனுப்பக்கூடிய மின் மோட்டார் பம்புகள் அதிக விலையாக இருக்கும். ஆகையால் வாங்குவதற்கு முன்பு இதை மனதில் வைத்துக் கொள்ளவும்.
3. மோட்டார் பம்புகளின் HP பவரை கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது. பொதுவாக 0.5 – 2 HP விகிதம் கொண்ட பவர் மோட்டார்களை வீடுகளுக்கு போதுமானது. இதனைத் தாண்டி அதிக HP பவர் கொண்ட மோட்டாரை தேர்ந்தெடுத்தால் கூடுதல் செலவாக கூடும்.
4. நான்காவது மிக முக்கியமானது என்னவென்றால். மின் சேமிப்பு, பொதுவாக அனைவரும் பயப்படும் ஒரே காரணம் அதிக மின்சாரம் உபயோகிக்கப்படும் என்பதால்தான். நீங்கள் மின் மோட்டாரை வாங்கும் போது அதில் எவ்வளவு மின்சாரம் மாத மாதம் உபயோகிக்கும் என்பதை கேட்டு அறிந்து வாங்குவது நல்லது.
5. ஏதேனும் ஒரு மோட்டார் பம்புகளை வாங்குவதற்கு பதிலாக சிறந்த தரம் வாய்ந்த பிராண்டுகளை தேர்ந்தெடுப்பது சிறந்த தேர்வாகும்.
எடுத்துக்காட்டிற்கு : Kirloskar, Crompton, Havells, Texmo, Jindal Gold, Sameer, MXVOLT & Lakshmi.
பொதுவாக மக்களுக்கு இழக்க கூடிய கேள்விகள்
1. 1HP பவர் கொண்ட மின் மோட்டார் தண்ணீரை எவ்வளவு தூரம் அனுப்பும்?
நீங்கள் செங்குத்தாக உபயோகித்தால் 30 – 40 மீட்டர் (100- 300 அடி) வரை செல்லும். அதுவே நேராக உபயோகித்தால் குறைந்தது 300 மீட்டர் வரை செல்லும்.
2. DC அல்லது AC இதில் எந்த மோட்டார் பம்ப் சிறந்தது?
AC மோட்டார் பம்ப் – இது முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடியது. மற்றும் இதன் தரமும் வேகமும் அதிகமாக இருக்கும்.
DC மோட்டார் பம்ப் – இது சோலார் பவரின் இந்தக் கூடிய ஒரு சாதனம. மின்சாரம் இல்லாத போது நீங்கள் இதை பயன்படுத்தலாம்.
3. மின் மோட்டார் பம்புகள் இயங்க எவ்வளவு Voltage தேவைப்படும்?
1. Centrifugal – 220-240V single phase – 380-415V Three phase.
2. Submersible – 220-240V single phase – 380-415V Three phase
3. Booster – 220 -240V
4. Self – Priming – 220-240V.
4. மின் மோட்டார் பம்புகளுக்கு எவ்வளவு அழுத்தம் தேவைப்படுகிறது?
வீடுகளுக்கு – 1.5 – 3 bar (22 – 44 PSI)
நீர்ப்பாசனத்திற்கு – 2 – 4 bar (29-58 PSI)
நீர்த்தேக்க தொட்டியை நிரப்ப – 1 (14.5 PSI)
5. ஒரு மின்மோட்டார் பம்ப் தொடர்ந்து எவ்வளவு நேரம் இயங்கும்?
நீங்கள் எந்தவிதமான பம்புகளை வாங்கினாலும் அவைத்தொடர்ந்து ஒரு நாளுக்கு 22 மணி நேரம் வரை தொடர்ந்து இயங்கக்கூடும்.