சாதாரண போன் அழைப்பு மற்றும் WhatsApp அழைப்பு உள்ள வித்தியாசங்கள் என்னென்ன | Different between Normal calls & WhatsApp calls

சாதாரண போன் அழைப்பு மற்றும் WhatsApp அழைப்பு உள்ள வித்தியாசங்கள் என்னென்ன | Different between Normal calls & WhatsApp calls

சாதாரண அழைப்புகள் தொலைபேசி செல்லுலார் நெட்வொர்க் பயன்படுத்தி இணைக்கப்படுகின்றன. அதேசமயம் WhatsApp அழைப்புகள் இணையத்தின் உதவியால் இயக்கப்படுகின்றன. வாட்ஸ் அப் கால்கள் மேற்கொள்ள எந்த ஒரு செல்லுலார் நெட்வொர்க் உதவியும் தேவையற்றது.

தற்போது இந்த பதிவில் சாதாரண அழைப்புகள் மற்றும் Whatsapp அழைப்புகளின் வித்தியாசங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள்.

1. ஆடியோ தரத்தில் (Audio Quality): சாதாரண அழைப்புகள் மற்றும் Whatsapp அழைப்புகள்.

சாதாரண அழைப்புகள் :

ஈ வி எஸ் போன்ற உயர்தர எச்டி வாய்ஸ்உள்ளடக்கியது. செல்லுலார் நெட்வொர்க் உதவியுடன் தெளிவான ஆடியோவை வழங்குகிறது மேலும், ஆடியோ தரத்தை பொருத்தவரை நெட்வொர்க் சிக்னல் வலிமை மற்றும் நெட்வொர்க் கவரேஜ் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

whatsapp அழைப்புகள்:

VoIP codes போன்ற Opus பயன்படுத்தப்படுவதால் சிறந்த தெளிவாக ஆடியோவை கொண்டுள்ளது. சில நேரங்களில் இணையத்தின் வேகம் ஏற்ற இறக்கமாக இருக்கும் அந்த சமயத்தில் அதற்கு ஏற்புடையவாறு ஆடியோ தரத்தை சரியாக மாற்றிக் கொள்ளும்.

Data consumption comparison: சாதாரண அழைப்புகள் மற்றும் Whatsapp அழைப்புகள்

சாதாரண அழைப்புகள்:

சாதாரண அழைப்புகள் எந்த வகையிலும் மொபைல் டேட்டாவை குறைப்பதில்லை. நீங்கள் மாதாந்திர அழைப்பு கட்டணத்திற்கு மட்டுமே செலவிட வேண்டி இருக்கும்.

Whatsapp அழைப்புகள்:

whatsapp அழைப்புகளில் மொபைல் டேட்டா அல்லது WiFi பயன்படுத்தினால் குறைந்தது ஒரு நிமிடத்திற்கு 5MB வரை பயன்படுத்தக்கூடும். இது அவரவர் மொபைல் மற்றும் இணைய வேகத்தை பொறுத்து மாறுபடலாம்.

தற்போது 5ஜி சேவை தொடங்கி விட்டதால் சில இடங்களில் whatsapp அழைப்புகள் மேலும் வலிமையாக மற்றும் தரமாக உள்ளது.

3. பாதுகாப்பு: எது சிறந்தது சாதாரண அழைப்புகளா அல்லது Whatsapp அழைப்புகளா

சாதாரண அழைப்புகள் :

சாதாரண அழைப்புகள் ஜி எஸ் எம் குறியாக்கத்தை (GSM Encryption) நம்பி உள்ளன. இருப்பினும் இது பாதுகாப்பில் பலவீனமாக அற்றதாக உள்ளது. ஆகையால் இதன் மூலம் ஹேக்கர்கள் எளிதாக அணுகக்கூடும்.

whatsapp அழைப்புகள்:

whatsapp end-to-end encryption வசதியே வழங்குகிறது இதன் காரணமாக தகவலை அனுப்புபவரும் மற்றும் பெறுபவரும் பாதுகாப்பாக உணர முடியும். இந்த encryption வசதி இருப்பதால் உங்கள் தகவல்களை யாருடனும் whatsapp பகிரது.

4. கிராஸ் நெட்ஒர்க் கம்பெட்டிபைலிட்டி ( Cross network compatibility) : சாதாரண அழைப்புகள் vs வாட்ஸாப் அழைப்புகள் எது சிறந்தது

சாதாரண அழைப்புகள்:

சாதாரண அழைப்புகள் மெர்கொல்லும் போது குறைந்த பிராந்திய தொலைத்தொடர்பு மட்டுமே மேற்கொள்ள முடியும். சர்வதேச அளவில் தொடர்பை மேற்கொள்வதற்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். அது மட்டும் இல்லாமல் அழைப்புகளின் தரம் பொறுத்தவரை அந்தந்த நெட்வொர்க் கவரேஜை பொறுத்தது.

whatsapp அழைப்புகள்:

எந்த ஒரு கூடுதல் கட்டணம் இல்லாமல் உலக அளவில் அழைப்புகளை மேற்கொள்ளலாம் இணைய தொடர்பு மட்டுமே போதுமானது. வாட்ஸாப்ப் அதன் செயல்பாடுகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருப்பதால் அழைப்புகள் மிகவும் வசதியாக மாறிக்கொண்டு இருக்கின்றது.

5. சாதாரண அழைப்புகள் மற்றும் whatsapp அழைப்புகள்: 5g சேவையில்

5 ஜி சேவை உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் தொடங்கிவிட்டது இதன் மூலம் தரம் வாய்ந்த தொடர்பு அழைப்புகள் மேற்கொள்ள உதவுகிறது. அழைப்புகளுக்கு ஏற்ப அதன் கட்டணங்களும் இருந்து கொண்டு செல்கிறது. குறிப்பாக இந்தியாவில் மாதாந்திர கட்டணம் குறைந்த ரூபாய் 299 ஆக நிர்வகிக்கப்படுகிறது.

சாதாரண அழைப்புகளை தவிர்த்து whatsapp அழைப்புகள் மேற்கொள்ளும் போது கூடுதலாக இணைய டேட்டா அதிகமாக எடுக்கப்படுகிறது. இவற்றில் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று என்னவென்றால் பயனாளர்கள் தங்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் எவ்வளவு தரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவ்வளவு கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

6. Battery Consumption: சாதாரண மற்றும் Whatsapp அழைப்புகள்

செல்லுலார் நெட்வொர்க் வன்பொருள் பயன்படுத்தப்படுவதால் battery பயன்பாடு குறைவாக இருக்கும்.

அதே சமயம் வாட்ஸ் அப் அழைப்புகள் மேற்கொள்ளும் போது அதிகமாக பேட்டரியை புரிஞ்சி எடுத்துவிடும் காரணம், என்னவென்றால் இணைய டேட்டா உபயோகத்தில் இருக்கும் போது மொபைலின் பின்புறத்தில் பல செயலிகள் ஓடிக்கொண்டே இருக்கும். ஆகையால் எப்போதெல்லாம் டேட்டாவை உபயோகிர்களோ அப்போதெல்லாம் ஒரு தடவை டேட்டா எங்கேயாவது வீணாக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏன் whatsapp அழைப்புகள், சாதாரண அழைப்புகளை காட்டிலும் கூடுதல் பாதுகாப்பானது?

பொதுவாக பயனாளிகள் சாதாரண அழைப்புகளை காட்டிலும் whatsapp அழைப்புகள் தான் மிகவும் பாதுகாப்பானது என்பார்கள். இதன் காரணம், end -to -end encryption என்ற வசதி உள்ளதால் உங்களின் தகவல்களை குறிப்பாக மெசேஜஸ் மற்றும் வீடியோ அழைப்புகளை யாருடையும் பகிரது. உங்கள் நண்பர்களோ அல்லது எதிரிகளும் நீங்கள் சாதாரண அழைப்புகளை மேற்கொள்ளும் போது உங்களுக்கே தெரியாமல் நீங்கள் பேசுவதை பதிவு செய்ய முடியும் ஆனால் whatsapp அவ்வாறு செய்ய இயலாது.

சாதாரண அழைப்புகளின் தரவுகளை உங்கள் நெட்வொர்க் ப்ரவைடர் (Network Provider) நினைத்தால் யாருக்கு வேணாலும் பகிரலாம். அதே சமயம் வாட்ஸ் அப்பில் இதன் போல உணர்வுள்ள தகவல்களை யாருடனும் பகிரது. இதன் காரணங்களால் தான் சாதாரண அழைப்புகளை காட்டிலும் whatsapp அழைப்புகள் மிகவும் பாதுகாப்பாக கருதப்படுகிறது.

Leave a Reply